காதலி, அவரின் தாயார்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய காதலன்: யாழில் பயங்கரம்!

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காதலியையும், காதலியின் தாயாரையும் கத்தியால் வெட்டிய பின்னர் காதலனும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பனிப்புலம் பகுதியினை சேர்ந்த 35 வயதான குணதிலகம் பிரணவன், இளைஞன் அதே பகுதியினை சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்த நிலையில் குடும்பத்தாருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை  வீட்டு வளவினுள் புகுந்து மலசலகூடத்தினுள் ஒளிந்திருந்த இளைஞன் 4 மணியளவில் வீட்டில் உறங்கிய நிலையில் இருந்த காதலியையும் காதலியின்  தாயாரையும்  வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த நிலையில் இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இளைஞனும் பனிப்புலம் பகுதியில் உள்ள வளவொன்றினுள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

Latest Articles