கிளிநொச்சியில் 10 கிலோ கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் மூலம் 10 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சி வட்டக்கச்சியில் நேற்று (6) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் சுற்றித் திரிந்த போது மேற்கொண்ட விசாரணைகளின் போதே நெல் வயலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கஞ்சா பொதிகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

.கஞ்சா கையிருப்பின்  மதிப்பு ரூ.3 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. 20 வயதுடைய சந்தேக நபர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்.

Related Articles

Latest Articles