குடும்பஸ்தர் வெட்டிக்கொலை – மாத்தறையில் பயங்கரம்

ஒரு பிள்ளையின் தந்தை கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (14) அதிகாலை மாத்தறை – தொடங்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

37 வயதுடைய திமுத் சாமிக்க என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், சந்தேகநபரைக் கண்டுபிடிக்கும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles