” இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் இரு நாட்டு அரசுகளுக்கிடையில் எவ்வித பேச்சும் இடம்பெறவில்லை. தனியார் நிறுவனமொன்றே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளர் , அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
