கூரிய ஆயுதத்தால் தாக்கியே கனடாவில் இலங்கையர்கள் கொலை – பின்னணி என்ன? விசாரணை தொடர்கிறது!

கனடா ஓட்டாவா பகுதியில் 4 சிறார்கள் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியே கொலை செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸாரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர் என முன்னதாக தகவல் வெளியாகி இருந்தாலும், கத்தியை போன்றதொரு கூரிய ஆயுதத்தினாலேயே இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்துள்ள கனேடிய பிரதமர், இது பயங்கரவான வன்முறை என விமர்சித்துள்ளார்.

35 வயதான தர்ஷனி பண்டார நாயக்க கம வல்வே அவரது பிள்ளைகளான இனுகா விக்கிரமசிங்க (வயது 07), அஷ்வினி விக்கிரமசிங்க (வயது 04), றின்யான விக்ரமசிங்க (வயது 02) மற்றும் இரண்டு மாதங்களேயான கெல்லி விக் கிரமசிங்க ஆகியோரும், 40 வயதான அமரக்கோன் முதியான்சேலா ஜீ காமினி அமரக்கோன் என்பவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அமரக்கோன் என்பவர் அந்தக் குடும்பத்தின் உறவினர் என்றும், வீட் டில் வசித்து வந்ததார் எனவும் கூறப்பட் டது. பெண்ணின் கணவர் பலத்த காயங் களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 19 வயதான வெப்பிரியோ டீ சொய்ஸா என்பவரே மேற்படி சம்பவம் தொடர் பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரும் இலங்கைப் பிரஜை என்றும், அவர் கனடாவில் மாணவனாக இருந்தார் என்றும் ஒட்டாவா பொலி ஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles