கென்யோன் நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு!

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, கென்யோன் நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, இன்று (03) காலை 9.25 மணியளவில் நீர்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் 6 அங்குலம் வரை திறந்து விடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

– மஸ்கெலியா நிருபர்-

Related Articles

Latest Articles