கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் கைது

கணனி , கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்களை பல  கடைகளில் கொள்ளையடித்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹரகம, மிரிஹான, கொஹுவல மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் கொள்ளையில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 22 வயதுடைய வெள்ளவத்தை பாமன்கடை பகுதியை சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர்களிடம் இருந்து 15 மடிக்கணினிகள், ஒரு டெஸ்க்டாப், இரண்டு டேப்கள், 6 மொபைல் போன்கள், நான்கு ஸ்மார்ட் வாட்ச்கள், ஒரு பவர் பேங்க், ஒரு ட்ரோன் கேமரா மற்றும் இரண்டு ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Related Articles

Latest Articles