கொழும்பு மாநகரசபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் 61 வாக்குகளைப் பெற்றார்.
கொழும்பு மாநகரசபையில் 117 உறுப்பினர்கள் உள்ளனர். 115 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
இரகசிய வாக்கெடுப்பே நடத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் 54 வாக்குகளைப் பெற்றார்.
இதற்கமைய கொழும்பு மேயராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவுசெய்யப்பட்டார்.