2024 ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு அக்கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதன்போது சமகால அரசியல் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஆராயப்பட்டன.
இதன்படி அரசுடன் இணைவதில்லை எனவும், அமைச்சு பதவிகளை ஏற்பதில்லை எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் முடிவைமீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கும், கட்சி முடிவுக்கு கட்டுப்படாதவர்கள் வெளியேறலாம் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணி அமைத்து, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானமும் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.










