ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை ஏற்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் மீண்டும் நிராகரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின் இராஜினாமா செய்தார்.
எனினும், அவரது பதவி விலகல் கடிதத்தை கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் சஜித்தின் சமரச குழுவொன்று, இம்தியாஸை சந்தித்து ,தவிசாளர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார் என தெரியவருகின்றது.