சஜித் உண்மையை சொல்லி வாக்கு கேட்டார்: கடைசியில் பொய்யே வென்றது!

” சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகி இருந்தால் மலையக மக்களின் வாழ்வு மேம்பட்டிருக்கும். எனவே, உள்ளுராட்சிசபைத் தேர்தல் ஊடாக அவரின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தலவாக்கலையில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது உண்மையை சொல்லியே சஜித் வாக்கு கேட்டார். பொய்களை கூறியே அநுர வாக்கு கேட்டார். இறுதியில் பொய்தான் வென்றது. எனினும், இன்னும் ஒரு வருடத்துpல் இந்த அரசாங்கம் ஆட்டம் காணும்.

உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. அத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெற வைக்கவும். 6 ஆம் திகதி காலைவேளையிலேயே சென்று தொலைபேசி சின்னத்தக்கு வாக்களிக்கவும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது சஜித் ஜனாதிபதி ஆகி இருந்தால் மலையக மக்கள் வாழ்வில் மாற்றம் வந்திருக்கும். எதிர்க்கட்சியில் இருந்தபோது மலையக மக்கள் தொடர்பில் அநுரகூறிய விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை.” – என்றார்.

Related Articles

Latest Articles