சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று இன்று (07) நடைபெறவுள்ளது.

கொவிட் நிலைமைக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதும் எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதும் இதன் நோக்கமாகும்.

அதன்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதுடன், அனைத்துக் கட்சி செயலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றம் நாளை (08) முதல் நான்கு நாட்களுக்கு கூட்டுவதற்கு முன்னதாக தீர்மானித்திருந்தது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை, சுமார் 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles