உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இணைந்து செயற்படுவதற்கு புதிய லங்கா சுதந்திரக்கட்சியும், 43 ஆம் படையணியும் தீர்மானித்துள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கொழும்பில் இன்று கைச்சாத்திடப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் வழிகாட்டலுடன் இயங்கும் புதிய லங்கா சுதந்திரக்கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமை தாங்குகின்றார்.
சம்பிக்கவின் தலைமையில் 43 ஆம் படையணி செயற்படுகின்றது.










