மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்டத்தின், குமரி பிரிவில் 16 வயதுடைய மாணவி ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டார, சம்பவ இடத்திற்கு சென்று ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது. மேலதிக பொலிஸ் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்
