‘மலையக குயில்’ அசானிக்கு கம்பளை, அட்டபாகை பகுதியில் வைத்து விமலதர்ம தேசிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பௌத்த பிக்குகளும் பங்கேற்று அசானிக்கு ஆசி வழங்கினர்.
அத்துடன், பிரதேச செயலகம் முன்பாகவும் அரச அதிகாரிகளால் அசானிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
கம்பளையில் இருந்து வாகனப் பேரணியில் அசானி வரும் வழியிலேயே இவ்வாறு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
படங்கள் – பவன்
