சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற முதியவர் உயிரிழப்பு

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த முதியர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக, மயக்கமுற்ற நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

கல்கிஸ்ஸ பகுதியிலிருந்து வந்திருந்த 89 வயதுடைய நிஷாந்த கல்தேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிவனொளிபாத மலையில் தரிசனம் மேற்கொண்டுவிட்டு மீண்டும் திரும்பிவரும் வழியில் ரத்து அம்பலம பகுதியில் வைத்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து நல்லத்தண்ணி பொலிஸார், 1990 அம்பூலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலியா நிருபர் பெருமாள்

Related Articles

Latest Articles