‘சிஸ்டம் சேஞ்ச்’ – ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!

மக்கள் கோரும் ‘சிஸ்டம் சேஞ்ச்’ (கட்டமைப்பு மாற்றம் ) புதிய அமைச்சர்களால் மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது – என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது சிரேஷ்டத்துவத்தை கருத்திற் கொள்ளாமல் புதியவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். அமைச்சர் பதவிகள் வெறுமனே வரப்பிரசாதம் அல்ல, அது பெரிய பொறுப்பு, புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் எவரும் கூடுதல் சலுகைகளைப் பயன்படுத்த கூடாது எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

புதிய அமைச்சரவையிடமிருந்து நேர்மையான, திறமையான அரச நிர்வாகத்தை எதிர்பார்க்கின்றேன். அரச நிறுவனங்கள் வினைத்திறன்மிக்க கட்டமைப்பாக மாற்றப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மக்கள் கோரும் ‘சிஸ்டம் சேஞ்ச்’ (கட்டமைப்பு மாற்றம் ) புதிய அமைச்சர்களால் மேற்கொள்ள முடியும். இளைஞர்களும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles