சீதையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இலங்கை வருகிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி

வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகரும், அமைதி தூதுவரும், ஆன்மீக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி எதிர்வரும் மே மாதம் இலங்கை வரவுள்ளார்.

நுவரெலியா சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்கவே அவர் இலங்கை வருகின்றார்.

இதற்கான அழைப்பிதழை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,சீதையம்மன் ஆலய அரங்காவலர் தலைவருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் ஊடாக, ரவிசங்கர் குருஜிக்கு நேரில் கையளிக்கப்பட்டுள்ளது.

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

 

Related Articles

Latest Articles