சீனாவிலிருந்து இலங்கைக்கு வந்த அரிசி

சீனாவிலிருந்து இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு மற்றுமொரு நன்கொடையாக அரிசி கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 1,000 மெற்றிக் தொன் (100,000 பொதிகள்) கொண்ட புதிய அரிசித்தொகை இன்று (19) காலை கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளதுடன் குறித்த அரிசித் தொகை விரைவில் விநியோகிக்கப்படவுள்ளதாக சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 7,000 மெட்ரிக் தொன் (700,000 பொதிகள்) அரிசித் தொகை நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக சீனத் தூதரகம் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles