கடும் காற்று மற்றும் அடை மழையுடனான சீரற்ற காலநிலையால் நாட்டில் 16 மாவட்டங்களில் 24 ஆயிரத்து 252 குடும்பங்களைச் சேர்ந்த 82 ஆயிரத்து 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் உயிரிழந்துள்ளார். எழுவர் காணாமல்போயுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகள் அரசாங்க தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.