சுற்றுலாப் பயணிமீது வல்லுறவு – ஆட்டோ சாரதி கைது!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான 40 வயது பெண்ணை பாலியல் வல்லுறவிற்குற்படுத்த முயன்ற ஆட்டோ சாரதியை, எல்ல பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

எல்ல நகரிலிருந்து கரந்தகொல்லை உல்லாச விடுதிக்கு செல்வதற்கு அமேரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆட்டோவொன்றில் சென்ற போதே, ஆட்டோ சாரதி மனித சந்தடி இல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, இப் பெண்ணை பாலியல் வல்லுறவிற்குற்படுத்த முயன்றுள்ளார்.

ஆட்டோ சாரதியின் பிடியிலிருந்த தப்பி ஓடிய அமேரிக்கா பெண் எல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, தனக்கேற்பட்ட நிலை குறித்து முறைப்பாடு செய்துள்ளார். இப் புகாரையடுத்து, எல்ல பொலிசார் விரைந்து, குறிப்பிட்ட ஆட்டோ சாரதியைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆட்டோ சாரதி விசாரணையின் பின்னர் பண்டாரவளை மஜிஸ்ரேட நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்று, எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபேந்திர வாசனா அபேகுணவர்தன தெரிவித்தார்.

Related Articles

Latest Articles