சு.கவின் 72 ஆண்டு விழா கொழும்பில் – சந்திரிக்கா அம்மையாரும் பங்கேற்பு?

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரை அழைப்பதற்கு அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72 ஆவது ஆண்டுவிழா செப்டம்பர் 2 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

இதற்கான நிகழ்வை குருணாகலையில் நடத்துவதற்கு அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அரசு பக்கம் உள்ள சுதந்திரக்கட்சி குழு கொழும்பில் நடத்துவதற்கு தயாராகிவருகின்றது. கட்சியின் ஐக்கியம் கருதி இதற்கு மைத்திரிபால சிறசேன அனுமதி வழங்கியுள்ளார்.

எனவே, கொழும்பில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு அக்கட்சியின் ஆலோசகரான சந்திரிக்கா அம்மையாரை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Articles

Latest Articles