சூடானில் மோதல் – 25 பேர் பலி – 183 பேர் காயம்

சூடானில் வெடித்துள்ள மோதல்கள் காரணமாக குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 183 பேர் காயமடைந்தனர் என்று சூடான் மத்திய மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

சூடான் தலைநகர் கார்டோமில் அந்நாட்டு இராணுவத்துக்கும் துணைஈராணுவப்படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

துணை இராணுவக் குழுவினரின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், அவை சட்டவிரோதமானவை எனவும் இராணுவம் கூறியிருந்தது.

இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்து, தற்போது நாடு முழுவதும் மோதல் ஏற்பட்டுவருகின்றது.

துணை இராணுவப் படை தனது ஆதரவுப் படைகளுடன் முன்னேறி சென்று அந்நாட்டு சர்வதேச விமான நிலையத்தையும் இராணுவ தளம் ஒன்றையும் கைப்பற்றி உள்ளது.

Related Articles

Latest Articles