கொழும்பு மற்றும் யாழ். மாநகரசபைகள் உட்பட இலங்கையில் 339 உள்ளுராட்சிசபைகளுக்குரிய ஜனநாயகத் திருவிழா இன்று நடைபெறுகின்றது.
இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு ஆரம்பமானது. முதல் மாலை 4 மணிவரை வாக்காளர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முடியுமானவரை காலைவேளையிலேயே வாக்களிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 ஆயிரத்து 287 உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களே தெரிவுசெய்யப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களில் இருந்து 75 ஆயிரத்து 589 பேர் போட்டியிடுகின்றனர்.
13 ஆயிரத்து 759 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு கோடியே 71 லட்சத்து 56 ஆயிரத்து 338 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.
2 லட்சத்து 25 ஆயிரம் அரச ஊழியர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு கடமைக்கென 65 ஆயிரம் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 ஆயிரம் வரையிலான விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தேவையேற்படும்பட்சத்தில் இராணுவ ஒத்துழைப்பை கோருவதற்கு பொலிஸார் தயார் நிலையில் உள்ளனர்.