‘ஜனவரியில் மின் கட்டணம் அதிகரிக்கும்’ – எரிசக்தி அமைச்சர்

2023 ஜனவரியில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர புதன்கிழமை (21) தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டண திருத்தம் கண்டிப்பாக நடைபெறும் என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“இது தொடர்பான அதிகாரங்கள் குறித்து சட்டமா அதிபர் தனது ஆலோசனையை வழங்கியுள்ளார். அதன்மூலம், இலங்கை மின்சாரச் சட்டத்தின்படி தேவையான சட்டப் பணிகளை அமைச்சர்கள் அமைச்சரவையும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் என்ற ரீதியிலும் நானும் மேற்கொண்டு வருகிறோம்,” என்றார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

“உத்தேச மின் கட்டண உயர்வு, அதிகரிப்பை எவ்வாறு செயல்படுத்தலாம் மற்றும் இது தொடர்பான பிற தகவல்கள் அடங்கிய அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணங்கள் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பரிந்துரை செய்யப்பட்டவுடன், PUCSL கட்டுப்பாட்டாளர் கோரிக்கையை ஆய்வு செய்து, அதை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles