ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாத நடுப்பகுதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் இந்த விஜயத்தில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் ஜூலை 21ஆம் திகதி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஊடகங்களில் செய்திகளும் பரவி வருகின்றன.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமும் இதுவாகும்.
தனது இந்திய விஜயத்திற்கு முன்னதாக இம்மாத இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரான்ஸ் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
