ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவேன்: அறிவிப்பு விடுத்தார் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன். அதற்கான கட்டுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளது – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

காலியில் இன்று நடைபெற்ற “ ஒன்றிணைந்து வெல்வோம் – காலியில் நாம் ” பொது கூட்டத்ததொடரில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

“சவால்களை எதிர்கொள்ள முடியாமல் ஓடும் தலைவன் நான் அல்லன். நெருக்கடியான நேரத்தில் நாட்டை பொறுப்பேற்று, முன்னோக்கு சென்றுள்ளேன். வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவருகின்றோம். வரிசை யுகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.” – எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“ நாட்டில் அனைத்து பிரச்சினைகளும் தீரவில்லை என்பதை நான் ஏற்கின்றேன். மக்கள் கஷ்டத்துக்கு மத்தியில்தான் வாழ்கின்றனர். கடன் சுமை அதிகரித்துள்ளது. இது எமக்கு புரிகின்றது. எனவேதான் பிரச்சினைகளை கட்டங்கட்டமாக தீர்த்துவருகின்றோம்.” – எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

“ அஸ்வெசும வழங்கப்படுகின்றது. புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. உறுமய காணி உரிமை பத்திரம் வழங்கப்படுகின்றது. இவ்வாறு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்துவருகின்றோம். பெருந்தோட்ட மக்களுக்கும் காணி உரிமை வழங்கப்படும்.” – எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles