ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டத்தை கைவிட்டது அரசு

ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தும் யோசனையை அரசு கைவிட்டுள்ளதென நம்பகரமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி 2024 ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னரே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவுள்ளதென தெரியவருகின்றது.

2024 முற்பகுதியில் அவசர ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசு முன்னதாக திட்டமிட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் திரைமறைவில் இடம்பெற்றுவந்தன. இந்நிலையிலேயே அம்முடிவு கைவிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles