ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பிலேயே தற்போது கவனம் செலுத்தப்படுகின்றது. நாடு இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் உரிய நேரத்தில், உரிய வகையில் தேர்தல்கள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
