ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் இன்று (11) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில்; ஏற்பட்டுள்ளது. 6.2 ரிச்டர் அளவுகோலில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஹொக்கைடோ மாகாணத்தில் 140 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரையில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles