ஜுலையில் அமைச்சரவை மறுசீரமைப்பு – முக்கிய விடயதானங்கள் கைமாறும்

ஜுலை மாதம் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதன்படி முக்கிய சில அமைச்சுகள் கைமாறவுள்ளதுடன், விடயதானங்களும் கைமாற்றப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது.

குறித்த அமைச்சரவை மறுசீரமைப்பின்போதே நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு பதவி பஸில் ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ளது.

விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சு பதவிகள் மாற்றப்படலாம் அல்லது அவர்கள் வகிக்கும் அமைச்சுகளில்கீழுள்ள சில அரச நிறுவனங்கள் ஏனையோருக்கு மாற்றப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் கதை அடிபடுகின்றது.

அதேவேளை, அரச நிறுவனங்களின் பிரதானிகள் பதவியிலும் மாற்றம் வரக்கூடும் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles