ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட 3 பேர் விடுதலை

வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்தத் தீர்ப்பை இன்று (19)வழங்கினார்.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது  என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.

இதனையடுத்து, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான மொஹமட் ஜாகிர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles