டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்தப்படுத்த தீர்மானம்

மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாக முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

மேலும் நாளாந்த விநியோகம் சுமார் 2,500 மெற்றிக் தொன்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்திய கடன் வசதியின் கீழ் அடுத்த கப்பல் டீசல் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .

Related Articles

Latest Articles