ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்கவுள்ளார்.

அமெரிக்காவின் அழைப்பின் பிரகாரமே அவர் நிகழ்வில் பங்கேற்கின்றார்.

டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் புதிதாக பொறுப்பேற்கும் நிர்வாகத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவார் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விழாவுக்கு வருகை தரும் இதர வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் ஜெய்சங்கர் கலந்துரையாடவுள்ளார்.

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக ட்ரம்ப் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

Related Articles

Latest Articles