தங்கையின் தங்க நகையை திருடிவிட்டு, மேல் மாடியில் பதுங்கியிருந்த அண்ணன், பொலிஸார் வந்ததும் தப்பியோட முற்படுகையில் கீழே விழுந்து பலியாகியுள்ளார்.
கம்பளை, போத்தலாப்பிட்டிய பகுதியிலேயே நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரால் திருடப்பட்ட தங்க நகையின் பெறுமதி சுமார் 11 லட்சம் ரூபா என தெரியவந்துள்ளது.
