தந்தையை அடித்து கொலை செய்த மகன் – கந்தப்பளையில் பயங்கரம்

தனது தந்தையை மகனொருவர் பொல்லால் தாக்கி படுகொலை செய்துள்ள சம்பவமொன்று கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தில் நடைபெறவுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் தியாகபிரகாஸ் (வயது 45) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் தனது தந்தையை தாக்கியதாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கிய மூத்த மகன் கந்தப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அயல் வீட்டார் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles