தமிழக முதல்வரின் பாராட்டை பெற்ற செந்தில் தொண்டமான் காளை

திருச்சி திருவெறும்பூர் பகுதிக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி,அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர் ஆகியோருக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க மாநிலத் தலைவர் T. ஒண்டிராஜ் தலைமையிலான குழுவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில், புதிய சுகாதார விதிமுறைகளுடன் பொங்கல் திருவிழாவிற்காக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தமைக்கு தமிழக அரசுக்கு இதன்போத நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அதிக ரசிகர்களைக் கொண்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலசங்கத்தின்  தலைவர் செந்தில் தொண்டமானின் சிறந்த இரண்டு காளைகள் நிகழ்வில் காட்சிக்கு நிறுத்தப்பட்டன.

2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் யாராலும் அடக்க முடியாத சிறந்த காளைக்கு கார் பரிசாக வரலாற்றில் முதல்முறையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த பரிசை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலசங்கத்தின்  தலைவர் செந்தில் தொண்டமானின் காளை அந்த வருடம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் தட்டிச் சென்றது.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியிலும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலசங்கத்தின் தலைவர் செந்தில் தொண்டமானின் காளை,  சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் செந்தில் தொண்டமானின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசாக வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலசங்கத்தின்  தலைவர் செந்தில் தொண்டமானின் காளை தமிழகத்தில் நடைபெற்ற பெரும்பாலான ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று யாரும் அடக்க முடியாத வெற்றி காளையாக வலம் வந்துள்ளது. இந்த காளைக்கென தமிழகத்தில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இத்தனை சிறப்பு மிக்க காளைகளின் கயிறுகளை பெற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காளைகளை கெளரவித்தார்.

Related Articles

Latest Articles