தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு இதொகா தலைவர் வாழ்த்து!

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

” உங்களுடைய சேவைக் காலத்தில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதோடு, வடக்கு கிழக்கு தமிழர்கள் மாத்திரமின்றி நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய தங்களின் பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.” எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles