இரத்தினபுரி மாவட்டம் நிவிதிகல கல்வி வலயத்துக்குட்பட்ட தம்மோர்வ கொழம்பகம இல. 1 தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் ஒன்றினைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
நிவிதிகல தம்மோர்வ கொழம்பகம தமிழ் வித்தியத்திற்கு வழங்கப்பட்டிருந்த காணியை பெரும்பான்மை இனத்தவர்கள் கைப்பற்றியதை அடுத்த தமது பாடசாலையின் காணியை தமக்கு பெற்றுத் தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2019 ஆண்டு இரத்தினபுரி நிவிதிகல தம்மோர்வ கொழம்பகம தமிழ் வித்தியத்தின் காணியை பெரும்பான்;மை இனத்தவர்கள் கைபற்றியதை அடுத்து இந்த காணி சம்மந்தப்பட்ட வழக்கு விசாரணை இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இரத்தினபுரி நிவிதிகல தம்மோர்வ கொழம்பகம தமிழ் வித்தியத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாடசாலை நிர்வாகம் பிரதேச மக்கள் பாடசாலை மாணவர்கள் ஒன்றினைந்து காணி துப்பரவு பணிகளை ஆரம்பித்தனர்.அதனை தொடர்ந்து மீண்டும் இந்த பிரச்சினை இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு வருடங்கள் விசாரணையில் இருந்த வழக்கு கடந்த 2023.11.30.திகதி வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட காணி இரத்தினபுரி நிவிதிகல தம்மோர்வ கொழம்பகம தமிழ் வித்தியத்திற்கு உரியது என்று இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மேற்குறிப்பிட்ட பாடசாலை காணியை பிரதேச மக்கள் பாடசாலை மாணவர்கள் ஒன்றினைந்து சுத்தம் செய்த சந்தர்பத்தில் பெரும்பான்மை இனத்தவர்கள் தமக்கு இடைஞ்சல் செய்ததாகவும் பாடசாலை காணியை சுற்றி முள்ளுகம்பியினால் வேலி அடித்ததோடு இது தமக்குரிய காணி என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமது பாடசாலை காணியை பெற்று தருமாறு இரத்தினபுரி நிவிதிகல தம்மோர்வ கொழம்பகம தமிழ் வித்தியாலய மாணவர்கள் ஆசிரியர்கள் பிரதேச மக்கள் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
