வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தனிமையில் வாழ்ந்துவந்த 90 வயது மூதாட்டியொருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல்முல்ல கீழ் பிரிவு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் நேற்றிரவு ஏற்றப்பட்டிருந்த விளக்கு, குறித்த பெண் உறங்கிக்கொண்டிருந்த கட்டிலில் விழுந்து இத்தீபரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.










