முடிவுக்கு வந்தது போர்: 19 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்து! ஈரான் அறிவிப்பு

அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று (16) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தைகள் இரண்டு முக்கிய கட்டங்களாக பிரிக்கப்பட்டு, முதல் கட்டத்தில் ஹார்முஸ் நீரிணை விவகாரம் மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்படும்.

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் அணுசக்தி விவகாரங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது தொடர்பான இறுதிக் கட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles