தேசிய அரசு அமைக்கப்படாது – மொட்டு அக்கட்சி அறிவிப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.

அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘முழு நாடும் சரியான பாதைக்கு’ என்ற மாநாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோருடன் ஒன்றிணைந்திருந்த சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விமல், கம்மன்பிலவின் அமைச்சு பதவிகள் பறிபோனதன் பின்னர் தனித்து செல்வதை காண முடிகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு விமல், கம்மன்பில ஆகியோர் முன்னின்று செயற்பட்டனர். நெருக்கடியான சூழ்நிலைமையின் மத்தியில் தான் ஜனாதிபதி அவர்களை பதவி நீக்கினார். பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்களின் செயற்பாடு மீது முழுமையாக நம்பிக்கை கொள்ளமுடியாது.

எந்நிலையிலும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள் என்பதை ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்டு வருகிறேன்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைய வேண்டிய தேவை பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது. அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles