தேயிலை தோட்டத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு – புபுரஸ்ஸ பொலிஸார் தீவிர விசாரணை

கம்பளை, புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்கம பகுதியில் இன்று (23) காலை தேயிலை மலையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் யாரென அடையாளம் காணப்படாத நிலையில், அவர் சுமார் 45 வயது மதிக்கதக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பின்னர் இவர் தேயிலை மலைக்குள் வீசப்பட்டாரா அல்லது எவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது தொடர்பில் புபுரஸ்ஸ பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

புபுரஸ்ஸ நிருபர் – ரம்யா

Related Articles

Latest Articles