தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் பிரதமர் விரைவில் பேச்சு

உள்ளாட்சிசபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை விரைவில் – அழைத்து பேச்சு நடத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.

” நீதிமன்றமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் நான் கருத்துகூற முற்படவில்லை.எனினும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை அழைத்து தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாட எதிர்பார்க்கின்றேன்.” – எனவும் பிரதமர் கூறினார்.

Related Articles

Latest Articles