தொடர்ந்து 7வது ஆண்டாக பின்தங்கிய கிராமங்களில் கல்வியை மேம்படுத்தி வரும் ‘Puritas Sathdiyawara Going Beyond’

•ஒட்டுமொத்த குழு பங்களிப்பு 111 மில்லியன் ரூபா

•நிலையான திட்டங்களின் மூலம் 23க்கும் அதிகமான கிராமப்புற சமூகங்களில் 43,808க்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியது

•நீர் சுத்திகரிப்பு, முழு வசதிகளுடன் கூடிய நூலகங்கள், டிஜிட்டல் வகுப்பறைகள் மற்றும் அத்தியாவசிய பள்ளி பொருட்களை வழங்குவதன் மூலம் நீண்டகால தாக்கம்

புகழ்பெற்ற இலங்கையின் பன்னாட்டு நிறுவனமான Hayleys குழுமம், அதன் முதன்மையான சமூக பேண்தகைமை முயற்சியான ‘Puritas Sathdiyawara Going Beyond’ என்ற பதாகையின் கீழ் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக அதன் தத்தெடுக்கப்பட்ட கிராமப்புறங்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான முக்கிய ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

நாள்பட்ட சிறுநீரக நோயால் (Chronic Kidney Disease – CKD) பாதிக்கப்பட்ட கிராமப்புற சமூகங்களுக்கு, பின்னோக்கிய சவ்வூடுபரவல் (Reverse Osmosis – RO) நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதன் மூலம் சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக, ‘Puritas Sathdiyawara’ என்ற பெயரில் இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

இன்று, இந்த அடிப்படை உயிர் கொடுக்கும் முன்முயற்சியானது, கல்வி, வாழ்வாதார மேம்பாடு மற்றும் முழுமையான வசதிகளுடன் கூடிய நூலகங்கள் மற்றும் இணைய அணுகல் மையங்களை நிறுவுதல் ஆகியவற்றில் முதலீடுகள் மூலம் நீண்டகால நிலையான சமூக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளது.

Hayleysஇன் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டிதகே கூறுகையில், “Hayleys இலங்கையின் பொருளாதார செயல்திறனில் முன்னணியில் உள்ளது, அதன் சாதனை வளர்ச்சிக்கு ஏற்ப நிலையான வணிக உத்திகளின் முன்மாதிரியான வணிக மாதிரியுடன் உள்ளது.

அத்துடன் பெருநிறுவன சமூகப் பொறுப்பும் எங்கள் இரத்தத்தில் ஊரிப் போயுள்ளது.”
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த Puritas மற்றும் Haycarb முகாமைத்துவப் பணிப்பாளர் ரஜித காரியவசன், “இலங்கையின் வறண்ட வலயத்தில் உள்ள கிராமப்புற சமூகங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான அவசரத் தேவையைப் புரிந்துகொள்வதன் மூலம் Puritas Sathdiyawara உருவாக்கப்பட்டது.

சமூகத்தில் வறுமையைக் கட்டுப்படுத்துவதற்கும், தரமான கல்விக்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும், ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் நோக்கில் பணியாற்றுவதற்கும் சமூகப் பரப்புரைக்கு பின்னர் மேம்பாட்டு நடவடிக்கை விஸ்தரிக்கப்பட்டது.

அந்த நேரத்தில், ஒட்டுமொத்த மாணவர் வருகையின் அதிகரிப்பையும், தேசிய மட்டத்திலான பரீட்சைகளுக்கு தோற்றக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததைக் காணும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது.” என தெரிவித்தார்.

ஹேலிஸ் குழுமத்தின் அனைத்து வணிகப் பகுதிகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட எங்கள் குழுவுடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னின்று ஒருங்கிணைத்த பியூரிடாஸ் தலைவர் திருமதி ஷர்மிளா ரகுநாதன் கூறுகையில், “இந்தக் குடும்பங்களிலிருந்து கல்விக்காக செய்யும் செலவுகளின் சுமையை அகற்றுவது போன்ற எளிமையான நடவடிக்கைகள் காலத்தின் தேவை என்றும், கல்வி கற்பதை இடைநிறுத்துவதைக் கட்டுப்படுத்துவதில் பங்களிக்கின்றன என்றும் நாங்கள் நம்புகிறோம்.

இந்த கீழ்மட்டத்திலுள்ள சமூகங்களை வலுப்படுத்துவதற்கும், தொற்றுநோயால் ஏற்படும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த இன்றியமையாத பணியைத் முன்னெடுத்துச் செல்ல நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம்,” என கூறினார்.

2014இல் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், Hayleys PLC, Haycarb PLC, Hayleys Advantis Limited, Hayleys Fabric PLC, Dipped Products PLC, Hayleys Aventura, Hayleys Agriculture Holdings, Alumex PLC, Mabroc Teas மற்றும் Hayleys Fibre PLC ஆகியவற்றின் அனுசரணை மற்றும் ஒத்துழைப்பை உள்ளடக்கியதாக இன்று விரிவடைந்துள்ளது.

இந்த வருடம் Sathdiyawara சமூக வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள 14 பாடசாலைகளைச் சேர்ந்த 3,500இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பாடசாலை பொருட்கள் வழங்கப்படுகின்றன.

2020ஆம் ஆண்டில், Puritas Sathdiyawara திட்டத்தின் மூலம் DP Education உடன் இணைந்து, 12 பாடசாலைகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை வழங்கும் வகையில், கற்பித்தல் மற்றும் கற்றலில் சிறந்து விளங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலவச டிஜிட்டல் கல்வி தளமாகவும் உள்ளது.

ஹெய்லிஸ் குழுமத்தின் துணை நிறுவனமான Dipped Productsஇனால் பரங்கியாவாடிய பகுதியில் சமூகத்தினருக்காக ஒரு முழுமையான நூலகத்தை கட்டியுள்ளது, இந்த திட்டத்தின் கீழ் பின்தங்கியுள்ள கிராமப்புறங்களுக்கு வழங்கப்படும் ஒன்பதாவது நூலகமாகும்.

இந்த நூலகங்களில் மாணவர்களுக்கு இலவச கற்றல் வகுப்புகளும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles