தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தைவிடவும் கரட் விலை உச்சம்!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய வரலாற்றில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை ஆயிரம் ரூபாவை தாண்டியமை இதுவே முதன் முறையாகும் என பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விலை 750 முதல் 800 ரூபாவரை காணப்படுகின்றது.

ஒரு கிலோ லீக்ஸின் மொத்த விலை 400 முதல் 500 ரூபாவரை காணப்படுகின்றது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவே வழங்கப்பட்டுவருகின்றது.

Related Articles

Latest Articles