தோட்ட மக்களுக்கு காணி வழங்கினால் பெருந்தோட்டத்துறை அழியுமாம் – துரைமார் போர்க்கொடி

” பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனையானது தேர்தல் கால வாக்குறுதி மட்டுமே. அந்த யோசனை அமுலுக்கு வராது. அவ்வாறு தோட்டக் காணிகளை பங்கீட்டால் அதுவே பெருந்தோட்டத்துறையின் அழிவின் ஆரம்பமாக அமையும். இத்திட்டத்தை நாம் எதிர்க்கின்றோம்” – என்று சிலோன் தோட்ட அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தயால் குமாரகே தெரிவித்தார்.

நுவரெலியா – ரதல்ல பகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக்கும் திட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

குறித்த ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

உரம் விநியோகிக்கப்படும் என ஜனாதிபதி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஆகியோர் அறிவிப்புகளை விடுத்து வந்தாலும், அதற்கான வேலைத்திட்டம் இன்னும் வகுக்கப்படவில்லை. அது தொடர்பில் எமக்கு தெளிவுபடுத்தவும் இல்லை. இது தாமதிக்கப்படுவதன் பின்னணியில் வேறு நோக்கம்கூட இருக்கலாம் என சந்தேகிக்கின்றோம்.

தோட்டங்கள் காடாகி வருகின்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நாமும் ஏற்கின்றோம். ஏனெனில் களைக்கொல்லி மற்றும் புற்களை அழிக்ககூடிய மருந்துகள் இல்லை. தோட்டங்கள் காடாவதற்கு இதுவே காரணம். தோட்டங்கள் காடாகினால் கொழுந்து பறிக்க முடியாது. தற்போது 50 வீதமான தொழிலாளர்கள், இத்தொழியில் இருந்து வெளியேறியுள்ளனர். இரப்பர் தொழிலாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனையானது தோல்வி கண்ட பொறிமுறையாகும். பலரும் அது பற்றி கதைக்கின்றனர். ஆனால் பரீட்சாத்த நடவடிக்கைகூட தோல்வி கண்டுள்ளது. இதனை நாம் தேர்தல் கால வாக்குறுதியாகவே கருதுகின்றோம். அதனால்தான் இன்றளவில் நடைமுறைக்கு வராமல் உள்ளது.

தொழிலாளர்களுக்கு காணிகளை பங்கிட்டு வழங்கினால் அவர்கள் தேயிலை பயிரிடமாட்டார்கள். கிழங்கு, கரட் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளையே மேற்கொள்வார்கள். இதனால் தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்படும். குறிப்பாக பெருந்தோட்டத்துறையின் அழிவின் ஆரம்பமாகக்கூட இதனை பார்க்கலாம். பெருந்தோட்டத்துறையின் இருப்பை காக்க முடியாது என்பதே எமது மற்றும் தொழிலாளர்களின் கருத்தாகும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles