புசல்லாவை, புதிய சப்ளி இரட்டபாதை கிராமத்தில் – மக்கள் அன்றாடம் நடமாடும் பிரதான பாதையின் நடுபகுதியில் மின்சார கம்பம் உடைந்து விழுந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அது இன்னும் அகற்றப்படவில்லை.
இது தொடர்பில் பல தடவைகள் கம்பளை மின்சார சபையில் முறைப்பாடு தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பாதை வழியாக தினம் 150 பேர் வரை செல்கின்றனர். பாடசாலை மாணவர்கள், தொழிலுக்கு செல்பவர்கள் வயோதிபர்கள் என எல்லோரும் மிகவும் அச்சத்தின் மத்தியில் தினம் செல்வதாக கூறுகின்றனர்.
சிலர் அந்த கொங்கிரிட் கம்பத்தில் மோதி காயம் அடைந்தும் உள்ளதாக கூறுகின்றனர்.எனவே உரிய அதிகாரிகள் இது தொடர்பாக கவனமளிக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
புஸல்லாவை பவன்












