நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம் – மஹிந்த சூளுரை!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின்பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியால் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச,

“ சபாநாயகருக்கு ஆதரவாக நாம் செயற்படுவோம். நம்பிக்கையில்லாப் பிரேரணைiயை நிச்சயம் தோற்கடிப்போம்.” – என்று கூறினார்.

Related Articles

Latest Articles