‘நல்லாட்சியில் மக்கள் நன்றாக வாழ்ந்தனர்’ – அரசை சாடுகிறார் மைத்திரி

” நாட்டில் இன்று எது நடந்தாலும் தற்போதைய ஆட்சியாளர்கள், நல்லாட்சியே அதற்கு காரணம் எனக் கூறுகின்றனர். எனது தலைமையிலான நல்லாட்சியில் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். இந்த ஆட்சியில்கீழ் மக்கள் துன்பப்படுகின்றனர்.” -என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் இன்று மின்வெட்டு அமுலில் உள்ளது. டொலர் பிரச்சினை உள்ளது. இவற்றுக்கு நல்லாட்சியேக் காரணம் எனக் கூறுகின்றனர். நல்லாட்சியில் அரசுக்குள் பிரச்சினை இருந்தது, ஆனால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். கடந்த இரு வருடங்களில் மக்கள் மகிழும் வகையில் இந்த அரசால் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

எல்லாவற்றுக்கும் கொரோனாவை சுட்டிக்காட்டிக்கொண்டிருக்க முடியாது. எமக்கு அதிகாரம் முக்கியமில்லை. நாட்டை மீட்கும் தேசிய வேலைத்திட்டமே முக்கியம். 11 பங்களிக்கட்சிகளுடன் எமது உறவு மேம்படும்.” – என்றார்.

 

Related Articles

Latest Articles